ஊரெல்லாம் ஒரேப் பேச்சு இதுதான்; அரிசியைப் போலவேப் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுகிறது!" என்றப் பேச்சுதான் அது! இது உண்மையாப் பொய்யா என ஆராய்வதற்கெல்லாம் யாருக்கும் நேரமில்லை! உடனே, பிளாஸ்டிக் அரிசியைத் தடைசெய்ய வேண்டும்; சீனா இந்தியா மீது இப்படி மறைமுகப் போர்த் தொடுக்கிறது; என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்! கொஞ்சம் நிதானமாக யோசித்திருந்தால் புரிந்திருக்கும், பிளாஸ்டிக், அரிசியைவிட விலை அதிகம்! பிளாஸ்டிக்கை அடுப்பில் வைத்தால் அது உருகும், கருகிய வாடை வரும் என்று! பிறகு ஏனிந்தப் பரபரப்பு? ஆந்திராவில் சிறுவர்கள் அரிசிசாதத்தைப் பந்துபோல உருட்டி விளையாடினார்களாம், அது எம்பிக் குதித்ததாம்; உடனே அரிசியில் பிளாஸ்டிக் கலப்படம், எனக் கிளப்பி விட்டார்கள்! இங்கேக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், சிறுவர்கள் தாங்களாக விளையாடினார்களா? இல்லை, இதுபோல செட்அப் செய்யப்பட்டு விளையாட வைக்கப்பட்டார்களா? என்பதுதான்! நான் உறுதியாக நம்புகிறேன் இதெல்லாமே செட்அப் தான்! இதுபோல வதந்திப் பரப்புவது இன்று நேற்றல்ல; காலம்காலமாய்த் தொன்றுதொட்டு வருகிறது! தகவல் தொழில்நுட்பம் வளராதக் காலங்களில் கூட இப்படி ஏதாவது ஒருப் புரளியைக் கிளப்பி விடுவார்கள். ஒருமுறை இப்படித் தான், புடலங்காய் மற்றும் பீர்க்கங்காய் செடிகளின் இலைகளில் பூச்சித் தாக்குதலால் மஞ்சள்நிற வரிகள் ஓடியிருந்தன; உடனே அப்பகுதியில் jஉள்ளச் செடிகள் மீதுப் பாம்புகள் ஊறிச் சென்றிருக்கின்றன, எனவே யாரும் அந்தக் காய்களை சாப்பிடவேண்டாம் எனப் பீதிகிளப்பினார்கள்! இப்படி எத்தனையோ உதாரணம் சொல்லலாம். என் பாட்டி வேடிக்கையாகச் சொல்வார்கள், நெசவுத்தொழிலாளர்கள் தங்கள் துணிகளில் சாயம் நன்றாக ஒட்டுவதற்காக இப்படிப் புரளிக் கிளப்புகிறார்கள் என்று! எது எப்படியோ, இதுபோலச் செய்பவர்களின் மனநிலை ஒன்றே ஒன்றுதான்! இதுபோலப் பரபரப்பாக ஏதாவது செய்ய வேண்டும், அதைப் பார்த்து மற்றவர்கள் பதறித் துடிக்க வேண்டும், அதை அவர்கள் பார்த்து ரசிக்கவேண்டும், அவ்வளவே! இப்பபடிப்பட்டக் குரூர மனப்பான்மை கொண்ட சேடிஸ்ட்டுகள் அனைவருமே ஹிட்லரின் மறு அவதாரங்களே!
-இன்னும் பகிர்வேன்.
-இன்னும் பகிர்வேன்.
No comments:
Post a Comment