Sunday, 4 August 2019

நண்பர்கள் தினக் கவிதை!


கருவுக்குள் உயிர் ஜனிக்கும் அந்த தருணம் போல நமக்குள் மெல்ல எட்டிப் பார்க்கின்றது  இந்த நட்பு!

பார்வைகளால், பாஷைகளால், ஸ்பரிசங்களால் அல்லாமல் ஒத்த உணர்வுகளால் நிகழும் பரிணாம வளர்ச்சியே இந்த நட்பு !

இணைதல் கூட முக்கியமில்லை; புரிதலும், பகிர்தலுமே நட்பின் இலக்கணமாம் !

நட்பில் மௌனத்துக்குக் கூட ஓர்அர்த்தம் இருக்கும் !

எந்த இடத்தில் நம் ரகசியங்களைக் கொட்டினால் அது வெளியில் கசியாமல் பாதுகாக்கப்படுமோ, அந்த வங்கிப் பெட்டகத்துக்குப்
பெயர் நட்பு !

ஆதரவாய் முதுகில் தட்டிக் கொடுக்கும் கைகளும், ஆறுதலாய்ச் சாய்த்து அரவணைக்கும் தோள்களும் பெற்றவன் அதிர்ஷ்டசாலி !

இது உதிரத்தில் உருவாகும் உறவல்ல; இதயத்தில் பிறந்து மனதுக்குள் காலம்காலமாய் சங்கமிக்கும் ஒரு உறவு ;
இல்லை இல்லை
ஒரு உணர்வு!

No comments:

Eat that frog book's main points in Tamil காலை எழுந்ததும் தவளை

 பிரையன் டிரேசி அவர்கள் எழுதிய   "காலை எழுந்ததும் தவளை" என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான கருத்துகளை இங்கே தொகுத்துள்ளேன்...