Wednesday, 7 August 2019

தொண்டைவலி குறைய!

தொண்டைப்புண்,
வறட்டு இருமல் போன்றவை குணமாக வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய கஷாயம் ஒன்றை பார்ப்போம்.

இந்தக் கஷாயம் செய்வதற்கு தேவையானப் பொருட்கள்;
 மிகச் சிறியத்துண்டு பட்டை (கொட்டைப் பாக்கில் இரண்டு கொட்டைப்பாக்கு அளவு) 3 கிராம்பு, 3 ஏலக்காய்,
 5 மிளகு ,ஒரு சிறு துண்டு இஞ்சி (சுண்டுவிரலில் கால்வாசி அளவு )
கிடைத்தால் வெற்றிலைக் காம்பையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
செய்முறை:
 ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் சுத்தமான தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவேண்டும்.
அந்தத் தண்ணீரில் மேற்கூறிய பொருட்களை சேர்க்க வேண்டும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு ஆகியப் பொருட்களை மிக்ஸியில் போடாமல் மொத்தமாக மடிக்கப்பட்டுள்ள செய்தித்தாளுக்கு நடுவே வைத்து குழவிக்கல்லால் நன்றாக நசுக்கி சுடுநீரில் போடலாம்.
தோல் சீவிய இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போடலாம். இதனுடன் கிடைத்தால் வெற்றிலை காம்பையும் சேர்த்துக் கொள்ளலாம்.
குறைந்தது கால் மணி நேரமாவது கொதிக்கவேண்டும். ஒன்றரை டம்ளர் தண்ணீர் பாதியாக சுருங்க வேண்டும்.
 பிறகு இதை வடிகட்டி இதனுடன் தேன் அல்லது
நாட்டுசர்க்கரை  கலந்து சாப்பிடலாம்.
காலை மாலை இரு வேளை இரண்டு நாட்கள் சாப்பிட்டு வர சளி இருமல் தொண்டை வலி ஆகியவை குறையும்.
(இந்தக் கஷாயம் கொஞ்சம் காரமாக இருக்கும்; ஆனாலும் காரமாகக் குடிப்பதே நல்லது. டீ காபி பருகும் சூட்டில் பருகவேண்டும்.)

No comments:

Eat that frog book's main points in Tamil காலை எழுந்ததும் தவளை

 பிரையன் டிரேசி அவர்கள் எழுதிய   "காலை எழுந்ததும் தவளை" என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான கருத்துகளை இங்கே தொகுத்துள்ளேன்...