Thursday, 24 October 2019

Beautiful love story

(படித்ததில் பிடித்தது)

கோகுலத்தில் கண்ணனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர்களில் ராதை கண்ணனின் மீது அளவு கடந்த பக்தியும், காதலும் கொண்டிருந்தாள்.

அதேபோல் கண்ணனும் ராதாவின் மீது அதிக அன்பு கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே கோகுலத்தில் உள்ள சோலைகள், வனங்களில் சுற்றித் திரிந்தனர்.இதைக் கண்டு பொறாமை கொண்ட கோபியர் ராதையின் தாயிடம் சென்று,

 'ராதை எப்போதும் கண்ணனுடன் சுற்றிக் கொண்டிருப்பதாகவும், அவளைக் கண்டிக்க வேண்டியும் கூறினர். ராதையின் தாயும் அவளைக் கண்டித்து வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருந்தாள்.

அதேபோல் யசோதையிடமும் கூறினர் கோபியர்.

யசோதையும் கண்ணனுக்கு வீட்டிலேயே சில வேலைகளைக் கொடுத்து அவன் தன்னை விட்டு அகலாதவாறு பார்த்துக்கொண்டாள்.

அதிக பிரியம் கொண்ட ராதையும், கண்ணனும் ஒருவரையொருவர் காணாது மிகுந்த ஏக்கம் கொண்டனர்.

அச்சமயம் ராதா வீட்டு பசுமாடுகளைக் கறப்பதற்கு ஆள் வராததால், கத்திக்கொண்டிருந்தது.

உடனே யசோதா,

'பாவம்! பசுக்கள் கத்துகிறதே!' என்று பரிதாபப்பட்டாள்.

இதைக் காரணமாகக் கொண்டே ராதையைக் காண எண்ணிய கண்ணன் தன் தாயிடம்,

 " அம்மா! நான் சென்று பால் கறந்து வரட்டுமா?" என்று வினவினான்.

யசோதாவும் ஏதோ ஒரு யோசனையில் சரி என்று தலையாட்டினாள். அவ்வளவுதான் தாமதம் கண்ணன் அங்கிருந்து துள்ளிக் குதித்து ராதையின் வீட்டை அடைந்தான்.

கண்ணன் வருவதைக் கண்ட ராதா, தன் தாயிடம் சென்று தான் தயிர் கடைந்து வருவதாகக் கூறினாள். அவள் தாயும் சரி என்று கூறியவுடன் ராதா தயிர் பானையும், மத்தையும் எடுத்துக்கொண்டு கண்ணனைக் காண வசதியாக இருக்கும் மாடிக்குச் சென்று அங்கிருக்கும் ஜன்னலின் அருகே அமர்ந்தாள்.

கண்ணனும் அவளைக் காணுவதற்கு வசதியாக அமர்ந்துகொண்டு பால் கறக்கத் தொடங்கினான்.

எப்போதும் ஒன்றாகவே, ஒருவரை ஒருவர் பாத்துக்கொண்டிருக்கும் அவர்கள், நீண்ட நாள்களாகப் பார்க்காததால் ஏக்கமடைந்தனர்.

அவர்களின் விழியில் காதலும், ஏக்கமும் பொங்கி வழிந்தது. இருவரும் கண்ணிமைக்க மறந்து ஒருவருடன் ஒருவர் விழியால் உரையாடிக்கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் சென்றதும், கண்ணன் இருக்கும் இடம் வந்த ராதையின் தாய் அவனைக் கடிந்துகொண்டாள்.

அப்போதுதான் கண்ணனுக்கு தான் காளை மாட்டில் பால் கறந்து கொண்டிருப்பது தெரிந்தது,

அவன் உடனே அங்கிருந்து ஓட்டமாய் ஓடினான்.

ராதையின் தாய், மாடிக்கு தன் மகளிடம் வெண்ணெய் வாங்குவதற்கு சென்றாள். அப்போதுதான் ராதைக்கு தயிரை ஊற்றாமல் வெறும் பானையை தான் கடைந்தது தெரிந்தது.

இதைப் பார்த்த ராதையின் தாய் தன் தலையில் அடித்தவாறே கீழிறங்கினாள்.

இவ்வாறு கிருஷ்ணனும், ராதையும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதல் மிகவும் அழகானது.

No comments:

Eat that frog book's main points in Tamil காலை எழுந்ததும் தவளை

 பிரையன் டிரேசி அவர்கள் எழுதிய   "காலை எழுந்ததும் தவளை" என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான கருத்துகளை இங்கே தொகுத்துள்ளேன்...