Sunday, 11 August 2019

சுயஇன்பம் செய்யலாமா?

சுய இன்பம் செய்வது சரியா? தவறா?
சரியென்றால் ஏன் சரி?
தவறென்றால் ஏன் தவறு?


ஆங்கிலத்தில் அழகாக ஒரு கருத்தைச் சொல்வார்கள்.
 உலகில் 99% ஆண்கள் சுய இன்பம் செய்கிறார்கள்.
மீதமுள்ள ஒரு சதவீதத்தினர் பொய் பேசுபவர்கள்! இந்த வாக்கியத்தில் இருந்து நாம் புரிந்துகொள்ளக் கூடிய  விஷயம் என்னவென்றால்;
உலகத்தில் உள்ள அனைத்து ஆண்களுமே அனேகமாக சுயஇன்பத்தில் ஈடுபடுகிறார்கள்!
சிலர் அதை வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறார்கள்.
சிலர் அதை வெளியில் காட்டிக் கொள்வதில்லை அவ்வளவுதான்!
சுய இன்பம் செய்வது சரியா, தவறா? இதுதான் உலகில் இன்றைய இளைஞர்கள் மத்தியில் முக்கியமான கேள்வியாக திகழ்கிறது!
அதுவும் தமிழ்நாட்டில் இந்த விவாதம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது!
ஒருபுறம் ஆங்கில மருத்துவர்கள், இதில் தவறு ஏதுமில்லை; தாராளமாக செய்யலாம் என அதை ஊக்குவிக்கிறார்கள்! இன்னொருபுறம் சித்த மருத்துவர்கள், சுய இன்பம் செய்வதால்
 நாடி நரம்பெல்லாம் தளர்ந்து ஆரோக்கியமற்ற மனிதர்கள் ஆகிவிடுவீர்கள்; என்று எச்சரிக்கிறார்கள்.
 இந்த இரு வாதங்களில்
 எதை கருத்தில் கொள்வது, எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்று புரியாமல் இன்றைய இளைஞர்கள் குழம்பிக் தவிக்கிறார்கள்.
சுயஇன்பம் செய்வதால் ஏதேனும் நன்மைகள் உள்ளதா?
நிச்சயமாக நன்மைகள் இருக்கின்றன!
பாலியல் குற்றங்கள் தடுக்கப்படுகின்றன. இதனால் அடுத்த நபர் பாதிப்புக்கு உள்ளாவதில்லை.
மனம் ஒரு அமைதியான பரவச நிலையை அடைகிறது!
உடலும் மனமும் புத்துணர்ச்சி அடைவதால் நாம் நம் அன்றாட வேலைகளில் உற்சாகமாக ஈடுபட முடிகிறது !
பாலியல் நோய்கள் ஏற்பட வாய்ப்பே இல்லை!
இத்தகைய காரணங்களால் தான் ஆங்கில மருத்துவர்கள் சுயஇன்பத்தைத் தவறு இல்லை என்று கூறுகிறார்கள்.
 அப்படியானால் சித்த மருத்துவர்கள் இதை தவறு என்று கூறுகிறார்களே!
 விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்று பயமுறுத்துகிறார்களே! அவர்கள் கூறுவதில் உண்மை இல்லையா? அவர்கள் பொய் பேசுகிறார்களா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை!
பொதுவாக மிருகங்களை எடுத்துக் கொண்டோமேயானால் அவை சதாசர்வகாலமும் பாலியல் சிந்தனையில் இருப்பதில்லை; ஆண்டின் ஏதோ ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் அதுவும் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே மிருகங்கள் பாலியல் உறவில் ஈடுபடுகின்றன!
சித்தர்களைப் பொறுத்தவரை மனிதர்களுக்கும் இது பொருந்தும் எனக் கருதினார்கள்.
 பாலியல் இன்பம் என்பது குழந்தைப் பேற்றுக்காக மட்டும் தான் என உறுதியாக நம்பினார்கள்!
பெண்ணாசை வந்துவிட்டால் உடல் சக்தி, மனோசக்தி இரண்டும் பாதிக்கப்படும் என்பதால் தான் பெண்களை பேய்கள் என வர்ணித்தார்கள்!
இதைத்தான் கவிஞர் வைரமுத்து கூட, "பெண்கள் கூட்டம் பேய்கள் என்று பாடம் சொன்ன சித்தர்களும், ஈன்ற தாயும் பெண்மை தானே என்ற உண்மையை மறந்த பித்தர்களே" என்று அழகாக ஒரு பாடல் வரியில் சுட்டிக் காட்டியிருப்பார்.
இயற்கையான பாலியல் உறவையே அதிகமாக வைத்துக் கொள்வது தவறு என்று கூறிய சித்தர்கள் சுயஇன்பத்தை மட்டும் ஆதரிக்கவாப் போகிறார்கள்!

சித்தர்கள் எதையும் நேரடியாக சொல்ல மாட்டார்கள். உதாரணமாக
வேப்பமரம், புளியமரம், முருங்கைமரம் ஆகிய மரங்கள் இரவில் அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடை வெளியிடும்; வெளியேப் படுக்காதீர்கள் என்று சொன்னால் யாராவது கேட்பார்களா?
நான் படுத்துப் பார்க்கிறேன் என்ன ஆகிறது என்று பார்க்கலாம் என்று எதிர்வாதம் செய்வார்கள். இதை தவிர்ப்பதற்காக தான் சித்தர்கள் என்ன சொன்னார்கள் என்றால், "வேப்பமரத்தில் பேய் இருக்கிறது", "புளியமரத்தில் பூதம் இருக்கிறது"
 "முருங்கைமரத்தில் முனி இருக்கிறது "என்று சொல்லி பயமுறுத்தினார்கள்! இப்படி சொல்லிவிட்ட பிறகு யாராவது மரத்தடியில் போய் படுப்பார்களா, என்ன?


சுயஇன்ப விஷயத்திலும் இப்படித்தான்;
சுய இன்பம் செய்தால் பாதிப்புகள் வரும், என்று சொன்னால் யாராவது கேட்பார்களா? அதனால்தான் "விந்து விட்டவன் நொந்து கெட்டான்"
 "ஒவ்வொரு துளியிலும் பலசொட்டு ரத்தம் உள்ளது" என்றெல்லாம் கூறிபயமுறுத்தினார்கள்.

 இந்த அளவுக்கு சித்தர்கள்
அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்கள் என்றால், சுயஇன்பம் செய்வதால் ஏதாவது பாதிப்புகள் இருக்கத்தானே வேண்டும்?
நிச்சயமாக, பாதிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன!
 ஆனால் அது நிறைய சித்தமருத்துவர்கள், ஊர் ஊராகப் போய் ரூம் போட்டு மருந்து கொடுக்கும் அளவுக்கு தீவிரமான பாதிப்புகள் அல்ல !
நமது விந்துவில் நேரடியாக ரத்தத் துளிகள் கலப்பதில்லை;
விந்துவில் நீர்ச்சத்து உள்ளிட்ட பிற சத்துக்கள் மட்டுமே உள்ளன! விந்துவில் இருக்கும் முக்கியமான பொருள் என்னவென்றால் அது குழந்தையை உருவாக்கும் உயிரணுக்கள் தான்! அதிகமாக சுய இன்பம் செய்வதால் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது;
மற்றபடி விந்துவுக்கும், ரத்தத்திற்கும் நேரடியாக சம்பந்தம் இல்லை. ஆனால் ஒரு மனிதன் சுயஇன்பம் செய்யும் போது விந்து வெளியேறும் வரை அவனுக்கு அதிக சக்தி தேவைப்படுகிறது.
அது குளிர்ந்த பாலை காய்ச்சி சூடாக்கி பொங்கி வரச் செய்யும் அடுப்பின் முயற்சிக்கு, அடுப்பின் சக்திக்கு ஈடானது !
எனவே தொடர்ந்து
சுயஇன்பம் செய்து வந்தால் நமது உடல் எவ்வளவு சக்தியை செலவிட வேண்டியது இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்!


சுயஇன்பம் செய்வதால் செலவிடப்படும் சக்தி, அதனால் ஏற்படக்கூடிய உடல் உஷ்ணம் ஆகியவற்றால் பாதிப்புகள் வரும்; என்பதால் தான் சித்த மருத்துவர்கள் சுயஇன்பத்தை தவிர்க்க சொல்கிறார்கள்.
சுயஇன்பம் செய்பவர்கள் மத்தியில் சுயஇன்பத்தை பற்றிய நிறைய கருத்துக்கள் நிலவுகின்றன!
 "சுயஇன்பம் செய்வதால் ஆண்மை குறைவு ஏற்படுகிறது" "கன்னங்கள் ஒடுங்கி விடுகின்றன" "ஞாபகமறதி ஏற்படுகின்றது" "ஆணுறுப்பு சிறுத்து காணப்படுகிறது" "பெண்களை திருப்தி படுத்த முடியாது" "விரைப்புத்தன்மை குறைகிறது"
"குழந்தைபாக்கியம் பெறுவதில் சிக்கல் ஏற்படும்"
 "கை கால்களில் நடுக்கம் ஏற்படும்"
" நரம்புத்தளர்ச்சி உண்டாகும்"
எனப் பலக் கருத்துக்கள் இன்றைய இளைஞர்களின் மனதில் விதைக்கப்படுகின்றன!
சுயஇன்பம் செய்வதால் ஏராளமான சக்தி செலவிடப்படுகிறது; என்று பார்த்தோம். வெளியேற்றப்பட்ட சக்தியை ஈடுகட்டும் அளவுக்கு நமது உடல் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும்!
அது சைவமோ, அசைவமோ சத்தான ஆகாரங்களை சாப்பிட்டு நமது உடலை வலுவுள்ளதாக வைத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக சொந்த ஊரிலிருந்து வந்து வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் ஒருவர் மூன்று வேளையும் காய்ந்துபோன பரோட்டாவும் ,இட்லி தோசையும் தின்று கொண்டு தினமும் சுயஇன்பம் செய்கிறார்; என்று வைத்துக் கொள்வோம், அவர் உடலில் என்ன சத்துக்கள் இருக்கும்? இருக்கின்ற கொஞ்ச நஞ்ச சத்துக்களும் உறிஞ்சப்பட்டுவிடும்! அப்புறம் கன்னம் ஒடுங்கி விடாமல் என்ன செய்யும்? எனவே செலவிடப்படும் சக்தியை ஈடுகட்டும் வகையில் நாம் காய்கறிகள், கீரைகள், பழங்கள் என சத்தான ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உறுப்பு சிறுத்து போதல் என்பது ஒரு சிலருக்கு ஏற்படக்கூடியது தான்; விரைப்பு அல்லாத நிலையில் அவர்களது ஆணுறுப்பு சிறுவர்களது ஆணுறுப்புப் போல காணப்படும்.
 ஆனால் விரைப்புத்தன்மை சரியாக ஏற்படும் பட்சத்தில் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை .
ஞாபகமறதி ஏற்படுவதும் சகஜம் தான்; சுயஇன்பம் செய்வதை குறைத்துக் கொண்டாலே இது சரியாகிவிடும்.
மற்றபடி, கைகால் நடுக்கம், நரம்புத்தளர்ச்சி, ஆண்மைகுறைவு, பெண்களைத் திருப்திபடுத்த முடியாது, குழந்தை பிறக்காது;  இதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட விஷயங்களே! 
சரி எவ்வளவு முறை தான் என் சுய இன்பம் செய்யலாம் என்று கேட்டால், மாதம் இரண்டு அல்லது மூன்று முறை செய்வது உத்தமம்! உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் வாரம் ஒருமுறை செய்யலாம். வாரம் இருமுறைக்குமேல் செய்வது உடல்நலத்தை கண்டிப்பாக பாதிக்கும்!

தினமும் செய்வதை கட்டாயம் தவிர்த்தேயாக வேண்டும்; தினமும் இரண்டுமுறை, மூன்றுமுறை செய்கிறேன்; என்பவர்களுக்கு, மேலே சொன்ன பாதிப்புகள் ஏற்பட்டாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒரேயடியாக சுயஇன்பம் செய்யாமல் இருக்க வேண்டியதில்லை; அப்படி நீங்கள் கட்டுப்படுத்தி வைக்கும் பட்சத்தில் தான், இரவில் தூக்கத்தில் விந்து வெளியேறிவிடுகிறது.
 இன்னும் சிலரோ நான் எனது ஆணுறுப்பை அசைப்பேன், ஆனால் விந்தை வெளியே விடமாட்டேன் விந்துவிடுவதால் தானே கெடுதல் என்று கேட்பார்கள்; இதனால் அதிக சக்தி வீணாகிறது அதற்கு சுயஇன்பம் செய்து விந்து விடுவதே மேல்! 
சரி! இதைக்குறைத்து கொள்வது அல்லது தவிர்ப்பது எப்படி?
 ஒரு மெகா விருந்துக்கு போகிறோம் என்று வைத்துக் கொள்வோம்; அது கல்யாண விருந்தாக இருக்கலாம், அல்லது அசைவ விருந்தாக இருக்கலாம்; திருப்தியாக சாப்பிடுவோம்.
 அடுத்த நாள் மீண்டும் அதே போன்றதொரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நேற்று சாப்பிட்ட மாதிரி ஃபுல் கட்டு கட்ட மாட்டோம்;  முடிந்தளவு தவிர்க்க பார்ப்போம், அல்லது அதில் வெகு குறைவாக தான் சாப்பிடுவோம்; ஏனென்றால் நேற்று இருந்தது போல சாப்பாட்டின் மீது நமக்கு ஆர்வம் இருக்காது! நேற்று சாப்பிட்ட திருப்தி, கூடவே சேர்ந்த சிறு சலிப்பு ஆகியவை நம்மை நிறைய சாப்பிட விடாமல் தடுத்துவிடும்! அதுதான் மனித இயல்பு.
அதேபோல ஒரு முறை நம் திருப்தியாக சுயஇன்பம் செய்து விட்டால், அந்த திருப்தியையும் ஒருவித சலிப்பு உணர்வையும் நமது மனதுக்குள்
உருவேற்றி அடுத்த சில நாட்களுக்கு அதைத் தள்ளிப்போட வேண்டும்.
அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று அங்கு அமைதியான சூழ்நிலையில் ஒரு மணி நேரம் உட்கார்ந்துவிட்டு வரலாம்; இது நமது மனது அலைபாயாமல் தடுக்கும்; எனவே தான் கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார்கள் நம் பெரியவர்கள்!
 இன்னும் ஒரு படி மேலே போய் சபரிமலைக்கோ, அல்லது அறுபடை வீட்டுக்கோ குறிப்பிட்ட நாட்கள் மாலை போடலாம்.
 தீவிரமான குடிப்பழக்கம் இருப்பவர்கள் கூட சாமிக்கு மாலை போடும் போது அதை தவிர்ப்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்! எனவே மனக்கட்டுப்பாட்டையும், சுயக்கட்டுப்பாட்டையும் விரும்புபவர்கள் ஏதாவது ஒரு சாமிக்கு மாலை போடலாம்.
நமது உடல் அதிகமாக சூடாக இருப்பது கூட நமது உடல்இச்சைகளை தூண்டும் எனவே காலை மாலை இருவேளைக் குளிக்கலாம்.
பிடித்த புத்தகங்களை படிப்பது,
திரைப்படம் பார்ப்பது, கலைகளை கற்பது, அருகில் உள்ள மைதானத்திற்கு சென்று பிடித்த விளையாட்டுக்களை விளையாடுவது, அலைபேசியிலும் விளையாட்டுக்களை விளையாடுவது,
ஏழை மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, முதியவர்களுக்கு உதவுவது போன்ற பயனுள்ள விஷயங்களில் நமது கவனத்தை திசை திருப்பலாம்! தனிமையில் இருப்பதை தவிர்த்தாலே 99% சுயஇன்பம் செய்வதை தவிர்க்க முடியும்.

உலகில் உள்ள அனைவருக்கும் ஐஸ்கிரீம் பிடித்த விஷயம் தான்!
அது பிடிக்கிறது; என்பதற்காக காலை, மாலை, இரவு என எந்நேரமும் நாம் அதை சாப்பிட்டு கொண்டிருப்பதில்லை வாய்ப்பு கிடைக்கும் பொழுது மட்டும் தான் அதை சாப்பிடுகிறோம்! ஒருவேளை எந்நேரமும் அதைசாப்பிட்டுக் கொண்டிருந்தால் நமது நிலைமை என்னாகும் என்று யோசித்துப் பார்க்கவேண்டும்.
அதுபோலத்தான் சுயஇன்பமும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதும், தேவை ஏற்படும் பொழுது மட்டும் செய்து வந்தால் நமது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்!
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் உங்களுக்கு இயற்கையாக பாலியல் உணர்ச்சிகள் ஏற்படும்பொழுது சுயஇன்பம் செய்யுங்கள்; நீங்களாக செயற்கையாக பாலியல்உணர்ச்சிகளை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். 

Wednesday, 7 August 2019

தொண்டைவலி குறைய!

தொண்டைப்புண்,
வறட்டு இருமல் போன்றவை குணமாக வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய கஷாயம் ஒன்றை பார்ப்போம்.

இந்தக் கஷாயம் செய்வதற்கு தேவையானப் பொருட்கள்;
 மிகச் சிறியத்துண்டு பட்டை (கொட்டைப் பாக்கில் இரண்டு கொட்டைப்பாக்கு அளவு) 3 கிராம்பு, 3 ஏலக்காய்,
 5 மிளகு ,ஒரு சிறு துண்டு இஞ்சி (சுண்டுவிரலில் கால்வாசி அளவு )
கிடைத்தால் வெற்றிலைக் காம்பையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
செய்முறை:
 ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் சுத்தமான தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவேண்டும்.
அந்தத் தண்ணீரில் மேற்கூறிய பொருட்களை சேர்க்க வேண்டும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு ஆகியப் பொருட்களை மிக்ஸியில் போடாமல் மொத்தமாக மடிக்கப்பட்டுள்ள செய்தித்தாளுக்கு நடுவே வைத்து குழவிக்கல்லால் நன்றாக நசுக்கி சுடுநீரில் போடலாம்.
தோல் சீவிய இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போடலாம். இதனுடன் கிடைத்தால் வெற்றிலை காம்பையும் சேர்த்துக் கொள்ளலாம்.
குறைந்தது கால் மணி நேரமாவது கொதிக்கவேண்டும். ஒன்றரை டம்ளர் தண்ணீர் பாதியாக சுருங்க வேண்டும்.
 பிறகு இதை வடிகட்டி இதனுடன் தேன் அல்லது
நாட்டுசர்க்கரை  கலந்து சாப்பிடலாம்.
காலை மாலை இரு வேளை இரண்டு நாட்கள் சாப்பிட்டு வர சளி இருமல் தொண்டை வலி ஆகியவை குறையும்.
(இந்தக் கஷாயம் கொஞ்சம் காரமாக இருக்கும்; ஆனாலும் காரமாகக் குடிப்பதே நல்லது. டீ காபி பருகும் சூட்டில் பருகவேண்டும்.)
பாடல்:கண்ணான கண்ணே.
படம்: விஸ்வாசம்.
இசை: டி.இமான்.
பாடியவர்: சித் ஸ்ரீராம்.
இயற்றியவர்: தாமரை.



கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா.
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூப்போல நீவ வா.

நான் காத்து நின்றேன்
காலங்கள்தோறும்
என் ஏக்கம் தீருமா
நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா

கண்ணீராய் மேகம் தூவும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா

ஆராரிராரோ
ராரோ ராரோ
ஆராரிராரோ
ஆராரிராரோ
ராரோ ராரோ
ஆராரிராரோ

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா.
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூப்போல நீவ வா.

சரணம்:

அலைக்கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே.

புதை மணலில் வீழ்ந்தேன்
புதைந்திடவே இருந்தேன்
குறுனகையை எறிந்தே
மீட்டாய் என்னை.

விண்ணோடும் மண்ணோடும்
ஆடும் பெரும் ஊஞ்சல்
மனதோரம்.
கண்பட்டு நூல்விட்டு
போகும் என ஏதோ
பயம் கூடும்.

மயில் ஒன்றைப் பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்.
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும்
இதே வினாடி


கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா.
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூப்போல நீவ வா.

நீ தூங்கும் போது
முன்னெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்.
போர்வைகள்  போர்த்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்

எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும்
மௌனத்தில் பேசணும்

ஆராரிராரோ
ராரோ ராரோ
ஆராரிராரோ
ஆராரிராரோ
ராரோ ராரோ
ஆராரிராரோ.


ஒருவன் பிளேடுகளை விழுங்குகிறான்;
 ஆணிகளின் மேல் அமர்கிறான்;
 நெருப்பின் மீது நடக்கிறான் என்றால் அவனுக்கு வலி இல்லை என்று அர்த்தமல்ல! அவன் அத்தனையையும் பொறுத்துக் கொள்கிறான் என்று அர்த்தம்!
எனவே பொறுத்துக் கொள்பவன் மதிக்கப்படுவான்!
 வெந்து தணிந்த தங்கம்தான், நகைகள் ஆகின்றது!
 வெந்து தணிந்த மூங்கில்தான், புல்லாங்குழல் ஆகிறது! வெந்து தணிந்த செங்கல் தான், உறுதியான கட்டிடம் தருகிறது!
எனவே எதையும் பொறுத்துக் கொள்வோம்;
பூமி ஆள்வோம்!

Tuesday, 6 August 2019

எனது ஹைகூ கவிதைகள்!

            "ஆஞ்சநேயர்"

ஆயிரம் வடைகள் மாலையாய் கழுத்தில்; உண்ண மனமில்லாமல் ஆஞ்சநேயர்!




             " ஊடல்"

முகங்களைத்
திருப்பிக்கொண்டதால்
எங்கள் முதுகுகள்
நலம் விசாரித்துக் கொண்டன!





             " முரண் "


பல்லக்கில் வந்த ராஜாவுக்கு கால்அமுக்கி விடுகிறான்;
சேவகன்!

             .................


சூரிய உதயம் கண்டு கொட்டாவி விடுகிறார்; இரவு காவலாளி!

            ...................



மீன்களின் இறந்த காலத்தில் தான் மீனவனின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது!

Monday, 5 August 2019

என் காஷ்மீர் சகோதரனுக்கு ஒரு அன்பு கடிதம்!

சகோதரனே!
உன் சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டது; என்று குமுறுகிறாயா?
இல்லவே இல்லை; இப்போது தான் உன் கால்கட்டு அவிழ்க்கப்பட்டுள்ளது; இனி நீ சிறகடித்து பறக்கலாம்!

கூட்டுப்புழுவாய் முடங்கிக்கிடந்த நீ,
 இனி பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரியலாம்!

உன்னைச் சேர்த்தணைத்து சொந்தம் கொண்டாட இருநூறுகோடிக் கரங்கள் காத்திருக்கையில்,
 நீ ஏன் போர்வையைப் போர்த்திக்கொண்டு தனித்திருக்கிறாய் ?

பனிக்கட்டி கூடப்
 பற்றி எரிகின்ற
 உன்தேசம், இனியாவது கொஞ்சம் பாதுகாப்பை உணரட்டும்!
 எங்கள் பாசத்தில்
உருகட்டும்!

ஜனநாயகம்
பறிக்கப்பட்டதாய்ப் பதறாதே!;
ஜனநாயகம் தோற்றதில்லை! சர்வாதிகாரம் வென்றதில்லை! ஜனநாயகத்தின் பக்கங்களில் சில சமயம் எழுத்துப் பிழைகள் நேர்வதுண்டு;
 பிரிதொரு நாளில் அது சரி செய்யப்பட்டு விடும் .

கைவிலங்கு
பூட்டப்பட்டதாய்க் கலங்காதே
உன் சிறைச்சாலை இப்போதுதான் திறக்கப்பட்டிருக்கிறது! 
 "அந்த மழை இரவு "


உன் இல்லம்
வந்த நான்
என் இல்லம்
திரும்ப முடியாமல் மாட்டிக் கொண்ட
 "அந்த மழை இரவு "


இடி மின்னலுக்கு பயந்து நீ என்னை இறுக அணைத்துக் கொண்ட.           
  "அந்த மழை இரவு  "


வேண்டாம்; என்று தடுத்த நம் மனசாட்சியை
நம் ஆடைகளால் மூடி மறைத்துவிட்டு நாம் எல்லை மீறிய
  "அந்த மழை இரவு "



நீந்தி வந்த தென்றலும்,
நீ வளர்க்கும்
கரடி பொம்மையும் மட்டுமே அறிந்து நமக்குள்ளேயே
புதைந்து போன
   "அந்த மழை இரவு "


நாம் இன்று பிரிந்தாலும் நம் மனதை
விட்டுப் பிரியாத
  "அந்த மழை இரவு "



நம்மை பிரித்தது விதியா?
விதியின் மேல்
பழியைப் போட்டு நாமேதானா?
பதில் சொல்லத் தெரியவில்லை .




ஜன்னலோரம் நான்! இன்று பெய்யும்
மழைத்துளிகளை ரசித்தபடி!
நமக்கு நம்மை ஞாபகப்படுத்துகிறதோ?
   "இந்த மழை இரவு" 

Sunday, 4 August 2019

சிறு புன்னகையுடன் பெரும் உற்சாகத்துடன் இந்த நாளை தொடங்குங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! 
நண்பர்கள் தினக் கவிதை!


கருவுக்குள் உயிர் ஜனிக்கும் அந்த தருணம் போல நமக்குள் மெல்ல எட்டிப் பார்க்கின்றது  இந்த நட்பு!

பார்வைகளால், பாஷைகளால், ஸ்பரிசங்களால் அல்லாமல் ஒத்த உணர்வுகளால் நிகழும் பரிணாம வளர்ச்சியே இந்த நட்பு !

இணைதல் கூட முக்கியமில்லை; புரிதலும், பகிர்தலுமே நட்பின் இலக்கணமாம் !

நட்பில் மௌனத்துக்குக் கூட ஓர்அர்த்தம் இருக்கும் !

எந்த இடத்தில் நம் ரகசியங்களைக் கொட்டினால் அது வெளியில் கசியாமல் பாதுகாக்கப்படுமோ, அந்த வங்கிப் பெட்டகத்துக்குப்
பெயர் நட்பு !

ஆதரவாய் முதுகில் தட்டிக் கொடுக்கும் கைகளும், ஆறுதலாய்ச் சாய்த்து அரவணைக்கும் தோள்களும் பெற்றவன் அதிர்ஷ்டசாலி !

இது உதிரத்தில் உருவாகும் உறவல்ல; இதயத்தில் பிறந்து மனதுக்குள் காலம்காலமாய் சங்கமிக்கும் ஒரு உறவு ;
இல்லை இல்லை
ஒரு உணர்வு!

Friday, 2 August 2019

பொங்கிவரும் புது வெள்ளம் போல அனைவர் வாழ்விலும் இன்பமும் மகிழ்ச்சியும் பொங்கி வழியட்டும்!போர்க்களமாய் இருந்த வாழ்க்கை பூந்தோட்டமாய் மலரட்டும்!
 அனைவருக்கும் இந்நாள் பொன்னாளாய் அமைய வாழ்த்துக்கள் .

Eat that frog book's main points in Tamil காலை எழுந்ததும் தவளை

 பிரையன் டிரேசி அவர்கள் எழுதிய   "காலை எழுந்ததும் தவளை" என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான கருத்துகளை இங்கே தொகுத்துள்ளேன்...