Saturday, 26 October 2019

ரமண மகத்துவம்!

!! படித்ததை பகிர்ந்து உள்ளேன்

#ரமண_மகரிஷியின் புற்று நோயினை கடுமையாக விமர்சித்து அவமதித்த  அண்ணாதுரை..?!!??

அமெரிக்காவில் திருவண்ணாமலை. . .
ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும் அளவு 12 ஆண்டுகள் தவம் செய்தார்.

சிவனை நேரில் கண்டார். அவர் முன் மயில், பாம்பு, பூனை, எலி முதலான பல விலங்குகள் தனது பகை மறந்து ஒற்றுமையாக இருந்தன.

தன்னை வந்து தாக்கிய தீயவர்களை கூட இவர் சபிக்கவில்லை. போலீசில் புகாரும் கொடுக்கவில்லை. அத்தகையோரிடமும் அன்பைக் காட்டி திருத்தினார்.

பலரின் நோய்களை இவர் குணப்படுத்தினார். அதே சமயம்.

இவர் தனக்கு வந்த புற்று நோயைக் குணப்படுத்த இவர் தனது தபோ வலிமையைப் பயன்படுத்த வில்லை.

எனது கர்ம வினையை நான் அனுபவித்தே தீர வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்தார்.

இந்த துறவியின் உத்தரவைத் தட்ட முடியாமல். மயக்க மருந்து கொடுக்காமல்தான் கேன்சர் கட்டியை நீக்கும் அறுவை சிகிச்சையை இவருக்கு டாக்டர்கள் செய்தார்கள்.

அந்த துறவி துளி கூட கத்தவில்லை. அவ்ளவு ஏன். ஒரு சொட்டு ரத்தம் கூட அந்த துறவிக்கு அறுவை சிகிச்சை செய்யும் பொழுது வரவில்லை.

 இத்தகைய ஒரு அதிசய நபரை அதுவரை அந்த மருத்துவர்கள் சந்தித்தது இல்லை. இனி சந்திக்கப் போவதும் இல்லை.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு இருந்த பதட்டத்தில் ஒரு சதவீதம் கூட அந்த துறவிக்கு இல்லை.
மலர்ந்த தாமரை போன்ற சிரித்த முகத்தோடு அந்தத் துறவி இருந்தார்.

நான் யார் என்ற கேள்வியை தனக்குத் தானே கேட்டுக் கொண்டு. அதற்கு விடையையும் கண்டு. முற்றும் உணர்ந்த ரமண மஹரிஷிக்கு இந்த கேன்சர் கட்டி எம்மாத்திரம்.

இவர் ஒரு உண்மையான ஞானி என்றால். இவருக்கு எவ்வாறு? புற்று நோய் வரும்.

தனது நோயை குணப்படுத்தும் சக்தியே இந்த ஞானிக்கு இல்லையா என்று ஒரு அரசியல்வாதி இவரை " அண்ணா" ந்து பார்த்து கேலி செய்தார்.

 அந்த அரசியல் வாதி ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே தமிழக முதல்வராக இருந்து புற்று நோயால் இறந்தார் என்பது தனிக் கதை.

நியூட்டனின் மூன்றாம் விதி சொல்வது என்ன? ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. ரமண மஹரிஷி போன்றவர்கள் இது போல் தன்னைப் பழிப்பவர்களை சபிக்க மாட்டார்கள்.

 அதே சமயம் நமது பாவ, புண்ணிய பலன்களை நாம் அனுபவித்தே தீர வேண்டும்.அதில் இருந்து தப்பவே முடியாது என்று தான் சித்தர், புத்தர் என அனைவரும் சொல்லும் விஷயம்.

 பூகோளம், வரலாறு, அறிவியல் என அனைத்தைப் பற்றியும் ரமணருக்குத் தெரியும். இவரிடம் யார் எந்த மொழியில் பேசினாலும் அந்த மொழியில் இவர் அவர்களிடம் பேசுவார்.

இவை எல்லாம் ரமணர் எப்பொழுது கற்றுக் கொண்டார் என்பது இவருக்கு நெருக்கமானவர்களுக்கே தெரியாத ஒன்று. ஒருமுறை அமெரிக்காவில் இருந்து ஒரு தம்பதியர் ரமணரை தரிசிக்க வந்து இருந்தனர்.
 திருவண்ணாமலைக்கு நிகராக ஏதேனும் எங்கள் அமெரிக்காவில் ஒரு புனித ஸ்தலம் இருக்கின்றதா என்று அந்த தம்பதியர் ஆவலோடு கேட்டனர்.

ரமணர் சில நொடிகள் கண்மூடிப் பின்னர் புன்னகை தவழும் முகத்துடன் இருக்கின்றது. அது கலிபோர்னியாவில் உள்ள Mount Shasta என்றார்.

திருவண்ணாமலை, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Mount Shasta இரண்டுமே ஒரு காலத்தில் எரிமலையாக இருந்தது.

தொடர்ந்து பத்தாயிரம் ஆண்டுகளாக ஒரு எரிமலையில் இருந்து எரிமலைக் குழம்பு வரவில்லை என்றால். அந்த எரிமலை Extinct Volcano.

திருவண்ணாமலை, Mount Shasta இரண்டுமே Extinct Volcano என்பதை  அந்த அமெரிக்கத் தம்பதியினருக்கு ரமண மகரிஷி சொன்னது தான் அவர்களுக்கு ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

தமிழ்நாட்டைத் தாண்டாத இவருக்கு, கலிபோர்னியாவில் அப்படி ஒரு மலை இருப்பது எவ்வாறு தெரிந்தது.

இன்று அமெரிக்காவில் உள்ள புனித ஸ்தலங்களில் Mount Shasta வும் ஒன்று. திருவண்ணாமலை போல் அந்த மலையையும் பல பக்தர்கள் கிரிவலம் செய்கிறார்கள்.

மேலும் புராணத்தில் குறிப்பிடப்படும் பாதாள உலகம் என்பது தனியாக உள்ள உலகம் அல்ல. அது இந்த பூமியின் மறு பகுதியான அமேரிக்கா.

இங்கே பகல் என்றால் அமெரிக்காவில் இரவு. புராணத்தில் குறிப்பிடப்பட்ட கபிலாரண்ய ஷேத்ரம் தான் இன்றைய கலிபோர்னியா மாகாணம், எனச் சொல்லுகின்றார்கள்.

Friday, 25 October 2019

திருப்பதி அற்புதம்!

படித்ததில் பிடித்தது!

ஒருமுறை ஹைதராபாத்திலிருந்து வந்த ஷேக் மஸ்தான் என்கிற ஒரு இஸ்லாமியர் திருப்பதிக்கு வந்து ஏழு மலைகளையும் நடந்தே கடந்து சென்று திருமலையை அடைந்தார். அங்குள்ள அர்ச்சகர்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கவே அதைக் கேட்ட அர்ச்சகர்கள் திடுக்கிட்டு ஆச்சர்யமுற்றனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரிகளிடம் அவரை அழைத்துச் சென்றனர். அவர்கள் தேவஸ்தான செயல் அலுவலரிடம் (E.O) அனுப்பி வைத்தனர். அவரை சந்தித்தவர், “ஐயா என் பெயர் ஷேக் மஸ்தான். நான் குண்டூரைச் சேர்ந்த சிறிய வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பல ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தினர் பின்பற்றும் வழக்கப்படி தினமும் காலை எங்கள் வீட்டில் உள்ள ஏழுமலையான் படத்தின் முன்பு ஒன்றாக கூடி, சுப்ரபாதம் பாடுவோம். எந்தவித தவறும் இன்றி, வெங்கடேஸ்வர ஸ்தோத்திரம், மங்களா சாசனம் ஆகியவற்றையும் பாடுவோம். “எங்கள் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக ஒவ்வொரு செவ்வாய் அன்றும் ஏழுமலையான் முன்பு ஸ்ரீனிவாச அஷ்டோத்திரத்தை சொல்லி வருகிறோம் (அஷ்டோத்திரம் என்பது இறைவனின் திருநாமத்தைப் போற்றிக் கூறும் 108 முறை போற்றுவது). இதுதவிர, எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பூக்கும் பூக்களை இந்த அஷ்டோத்திரம் கூறும்போது ஒவ்வொன்றாக ஸ்ரீநிவாசனுக்கு அர்பணிப்போம். 

இதுபோன்றதொரு தருணத்தில் எங்கள் முப்பாட்டனார் காலத்தில், பக்தர்கள் இதே போன்ற சேவையை ஏழுமலையானுக்கு செய்ய, தங்கத்தினாலான 108 பூக்களை அவனுக்கு (சொர்ண புஷ்பம்) காணிக்கையாக தருவதாக வேண்டிக்கொண்டார்கள். ஆனால், எங்கள் நிதிநிலைமை ஒத்துழைக்காததால் 108 பூக்களில் சில பூக்களை மட்டும்தான் என் கொள்ளுத் தாத்தாவால் சேர்க்க முடிந்தது. அவருக்கு பிறகு என் தாத்தா சிறிதளவு பூக்களைச் சேர்த்தார். பின்னர் என் அப்பா தன் காலத்தில் சிறிதளவு பூக்கள் சேர்த்தார். இப்போது நான் என் காலத்தில் அதை நிறைவு செய்திருக்கிறேன்” என்று கூற, அச்சரியத்துடன் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த தேவஸ்தான செயல் அலுவலர், “என்ன, நீங்கள் 108 தங்கப் பூக்களைச் சேர்த்துவிட்டீர்களா?'' என்றார்.

“ஆம்!” என்ற ஷேக் மஸ்தான்,  “ஐயா… மிகவும் கஷ்டப்பட்டு இந்தப் பூக்களைச் சேர்த்திருக்கிறோம். ஒவ்வொரு பூவும் 23 கிராம் எடையுள்ளது!” (கிட்டத்தட்ட ஒரு பூவும் மூன்று சவரன். 108 பூக்களின் மொத்த எடை சுமாராக இரண்டரை கிலோ)
“நாங்கள் உங்கள் அனைவரையும் கைகூப்பி கேட்டுக் கொள்வதெல்லாம், இந்த ஏழைகளிடமிருந்து ஸ்ரீநிவாசனுக்கு அன்புக் காணிக்கையாக இந்த மலர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை அஷ்டோத்திரம் சொல்லும்போதோ அல்லது வேறு ஏதேனும் சேவையின்போதோ பயன்படுத்தவேண்டும் என்பதே. எங்கள் கோரிக்கையைத் தட்டாமல் ஏற்றுக்கொண்டால், எங்கள் குடும்பத்தினர் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்போம். இந்த வேண்டுதலை நிறைவேற்றுவதன் மூலம் எங்கள் தாத்தாவின் ஆன்மா நிச்சயம் சாந்தியடையும். இதுதான் நான் சொல்ல விரும்பியது. இப்போது முடிவை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்” என்று சொல்லி முடித்தார்.
சற்று நேர அமைதிக்குப்பின் செயல் அலுவலர், “எவ்வித நிபந்தனையுமின்றி ஏழுமலையானுக்கு நீங்கள் கொண்டுவந்திருக்கும் காணிக்கையை ஏற்றுக்கொள்கிறோம். வெங்கடேசப் பெருமாள் சேவையில் பயன்படுத்துவோம் என்று உறுதியளித்தார். அதன்படியே ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 6 மணி அளவில், திருமலையில் அஷ்டதள பாத பத்மாராதனை எனப்படும் ஆர்ஜித சேவை துவக்கப்பட்டது.

1984-ல் திருமலையில் ஏழுமலையான் சந்நிதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இன்றளவும் நடக்கிறது.
திருமலை தேவஸ்தானத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றிய இந்த ஆர்ஜித சேவை, காலங்காலமாக ஏழுமலையான் மீது பக்தி செலுத்தி வந்த ஒரு குடும்பத்தின் கோரிக்கையையும் நிறைவேற்றியது. அதுமட்டுமல்ல, ஜாதி மத பேதமின்றி அனைவரையும் அந்த ஏழுமலையான் ரட்சித்து வருகிறான் என்பதையும் பறைசாற்றுகிறது.

சித்த மருத்துவத்தின் பெருமை

(படித்ததில் பிடித்தது)

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                         
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ 
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

Thursday, 24 October 2019

Beautiful love story

(படித்ததில் பிடித்தது)

கோகுலத்தில் கண்ணனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர்களில் ராதை கண்ணனின் மீது அளவு கடந்த பக்தியும், காதலும் கொண்டிருந்தாள்.

அதேபோல் கண்ணனும் ராதாவின் மீது அதிக அன்பு கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே கோகுலத்தில் உள்ள சோலைகள், வனங்களில் சுற்றித் திரிந்தனர்.இதைக் கண்டு பொறாமை கொண்ட கோபியர் ராதையின் தாயிடம் சென்று,

 'ராதை எப்போதும் கண்ணனுடன் சுற்றிக் கொண்டிருப்பதாகவும், அவளைக் கண்டிக்க வேண்டியும் கூறினர். ராதையின் தாயும் அவளைக் கண்டித்து வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருந்தாள்.

அதேபோல் யசோதையிடமும் கூறினர் கோபியர்.

யசோதையும் கண்ணனுக்கு வீட்டிலேயே சில வேலைகளைக் கொடுத்து அவன் தன்னை விட்டு அகலாதவாறு பார்த்துக்கொண்டாள்.

அதிக பிரியம் கொண்ட ராதையும், கண்ணனும் ஒருவரையொருவர் காணாது மிகுந்த ஏக்கம் கொண்டனர்.

அச்சமயம் ராதா வீட்டு பசுமாடுகளைக் கறப்பதற்கு ஆள் வராததால், கத்திக்கொண்டிருந்தது.

உடனே யசோதா,

'பாவம்! பசுக்கள் கத்துகிறதே!' என்று பரிதாபப்பட்டாள்.

இதைக் காரணமாகக் கொண்டே ராதையைக் காண எண்ணிய கண்ணன் தன் தாயிடம்,

 " அம்மா! நான் சென்று பால் கறந்து வரட்டுமா?" என்று வினவினான்.

யசோதாவும் ஏதோ ஒரு யோசனையில் சரி என்று தலையாட்டினாள். அவ்வளவுதான் தாமதம் கண்ணன் அங்கிருந்து துள்ளிக் குதித்து ராதையின் வீட்டை அடைந்தான்.

கண்ணன் வருவதைக் கண்ட ராதா, தன் தாயிடம் சென்று தான் தயிர் கடைந்து வருவதாகக் கூறினாள். அவள் தாயும் சரி என்று கூறியவுடன் ராதா தயிர் பானையும், மத்தையும் எடுத்துக்கொண்டு கண்ணனைக் காண வசதியாக இருக்கும் மாடிக்குச் சென்று அங்கிருக்கும் ஜன்னலின் அருகே அமர்ந்தாள்.

கண்ணனும் அவளைக் காணுவதற்கு வசதியாக அமர்ந்துகொண்டு பால் கறக்கத் தொடங்கினான்.

எப்போதும் ஒன்றாகவே, ஒருவரை ஒருவர் பாத்துக்கொண்டிருக்கும் அவர்கள், நீண்ட நாள்களாகப் பார்க்காததால் ஏக்கமடைந்தனர்.

அவர்களின் விழியில் காதலும், ஏக்கமும் பொங்கி வழிந்தது. இருவரும் கண்ணிமைக்க மறந்து ஒருவருடன் ஒருவர் விழியால் உரையாடிக்கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் சென்றதும், கண்ணன் இருக்கும் இடம் வந்த ராதையின் தாய் அவனைக் கடிந்துகொண்டாள்.

அப்போதுதான் கண்ணனுக்கு தான் காளை மாட்டில் பால் கறந்து கொண்டிருப்பது தெரிந்தது,

அவன் உடனே அங்கிருந்து ஓட்டமாய் ஓடினான்.

ராதையின் தாய், மாடிக்கு தன் மகளிடம் வெண்ணெய் வாங்குவதற்கு சென்றாள். அப்போதுதான் ராதைக்கு தயிரை ஊற்றாமல் வெறும் பானையை தான் கடைந்தது தெரிந்தது.

இதைப் பார்த்த ராதையின் தாய் தன் தலையில் அடித்தவாறே கீழிறங்கினாள்.

இவ்வாறு கிருஷ்ணனும், ராதையும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதல் மிகவும் அழகானது.

Friday, 18 October 2019

உஷ்! பேசாதீங்க.

(படித்ததில் பிடித்தது)

#மௌனம்_என்றால்_என்ன ?

காற்றுக்கு இலைகள் அசைகின்றன; மலர்கள்

அசைகின்றன; கொடிகள் அசைகின்றன; மரங்கள் கூட அசைகின்றன;

ஆனால் மலைகள் அசைவதில்லை.

அசைவது பலவீனத்தைக் காட்டுகிறது;

அசையாதது உறுதியியைக் காட்டுகிறது.

சளசளவென்று பேசுகிறவன், எவ்வளவு பெரிய

கெட்டிக்காரனாக இருந்தாலும்,

சொற்பொழிவாளனாக இருந்தாலும்,

தன் பலவீனத்தைக் காட்டிக் கொள்கிறான்.

மௌனி முட்டாளாக இருந்தாலும் பலசாலியாகக் காணப்படுகிறான்.

பேசாமல் இருப்பது பெரும் திறமை.

பேசும் திறமையைவிட அது மிகப்பெரியது.

அதனால்தான் ஞானிகளும் பெரிய மேதைகளும்

குறிப்பிட்ட சில காலங்களில் மௌன விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.

மௌனம் ஒரு மகத்தான கலை.

அது தெய்வீகக் கலை.

பிரஞ்சு மொழியில் ஒரு வார்த்தைக்கு ஒரே அர்த்தம் உண்டு.

ஆங்கில வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் வரும்.

தமிழ் வார்த்தையில் நாலைந்து அர்த்தங்கள் வரும்.

ஆனால், மௌனத்தில் எல்லையற்ற அர்த்தங்கள் உண்டு.

பேசாமல் இருப்பவனே, பெரிய விஷயத்தைச் சொல்பவன்.

பேசிக்கொண்டிருப்பவன் ஞானக்கிறுக்கன்.

ஏராளமான வரிகளைக் கொண்ட இலக்கியங்களைவிட,

ஏழு வார்த்தைகளில் அடங்கிவிட்ட திருக்குறள்,

உலகத்தைக் கவர்ந்து விட்டது.

காலங்கள் தோறும் துணைக்கு வருகிறது.

நிலையான தத்துவத்தைச் சொல்கிறது.

ஆரோக்கியத்திற்கும் மௌனம் மிக அவசியம்.

மனிதர்களைவிட, பல மிருகங்களுக்கு அதிக வயது.

அவற்றைவிட மரங்களுக்கு அதிக வயது.

அவற்றைவிட மலைகளுக்கு அதிக வயது.

காரணம் அவை பேசாமலும், அதிர்ச்சி அடையாமலும் இருப்பதே.

மௌனத்தின் சக்தியை உணர்ந்துதான் தவம் புரிந்தார்கள்;

நிஷ்டையில் அமர்ந்தார்கள்; மௌன விரதம் மேற்கொண்டார்கள்.

நீண்ட நாள் பேசாமல் இருப்பது என்பது,

ஒருவகை நிர்வகல்ப சமாதி;

அதை மேற்கொண்டவன் ஞானத்தைத் தேடினால்
அது கிடைக்கும்.

The survival!

(படித்ததில் பிடித்தது)

ஒரு #அர்த்தமுள்ள சின்ன கதை…

வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது.

அதை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது.

அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

அந்த பறவைக்கு தனிப் பாதுகாவலர், தனி உணவு அதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்துத் தரப்பட்டது.

கோடைகாலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது.

அந்த பறவை இனம் பெருகியது.

பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக பறக்க விடப்பட்டது.

அதற்கு தன் எதிரிகள் யார் என்றுத் தெரியவில்லை. அதனால் அந்தப் பறவை எதிரிகளுக்கு உணவானது

அந்த பறவைக்கு மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்றுத் தெரியவில்லை.

பறவைகள் அழிய தொடங்கின (எதிரிகளுக்கு உணவாகி, மின் கம்பங்களில் கருகி, வண்டிகளில் மோதியும்).

எந்த இனம் அழிய கூடாது என்று முயற்சி எடுக்கப்பட்டதோ, அந்த இனம் அழிய காரணமானது.

அதே போல் தான் நாம்.  நமக்கு கிடைக்காதவைகளை நம் பிள்ளைகளுக்கு கிடைக்கட்டும் என்று கொடுத்து நாம் அழகு பார்க்கிறோம். அவர்களுடைய அழிவுக்கும் நாமே உறுதுணையாய் இருக்கிறோம்.

பூங்காவில் இருக்கும் விலங்குக்கு வேட்டையாட தெரியாது.

அதே போல் தான் அதிகம் செல்லம் கொடுக்கும் பிள்ளைகளால் தோல்விகளை நிச்சயமாகத் தாங்க முடியாது.

உங்கள் பிள்ளைகளை வெளி உலகத்தை தானாக உணர வழி விடுங்கள்.  உங்கள் கைக்குள்ளேயே வைத்து பாதுகாக்கிறோம் என்று அவர்களை சுய சிந்தனையற்றவர்களாக ஆக்கி விடாதீர்கள்.

நல்லது கெட்டதை தானாக கற்று கொள்ளட்டும்.

நம் பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து விட்டோம்.  அவன்/அவள் வெளி உலகத்தை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்கிற சந்தேகம் உங்களுக்கு வேண்டாம்.
P
நீங்கள் கற்றுக் கொடுக்க மறந்த

 பாடத்தை இந்த சமூகம் மற்றும் இயற்கை கற்றுக் கொடுக்கும். எப்படி எனக்கும் என்னை போல் பலருக்கும் கற்று கொடுத்ததோ அதே போல.

இதைத் தான் ஆங்கிலத்தில்
#Survival_of_Fittest என்று நாம் சொல்லுகிறோம்.

அதை நோக்கித் தான் எல்லா ஜீவராசிகளும்  ஓடி கொண்டிருக்கின்றன.

.. ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣

வெங்கட்ராமன் 🌷 🌷

Thursday, 17 October 2019

நமது பிரச்சினைகள்!

(படித்ததில் பிடித்தது)

நூறு ஒட்டகங்கள்...
___________________

"ஓடிக்கொண்டே இருக்கிறேன்..

 பல பிரச்சனைகள். 

 வீட்டில், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் என எங்குமே பிரச்சனைகள்..

 தூங்கமுடியவில்லை..

 எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்" 

 என்றவாறே  முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன்.

அப்போது மாலை நேரம்.

முனிவர் அவனிடம்  "தோட்டத்திற்கு சென்று ஒட்டகங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என பார்த்துவிட்டு வா" என்றார்.

சென்றவன் திரும்பி வந்து , "100 ஒட்டகங்களும் நின்றுகொண்டு இருக்கின்றன" என்றான்.

"நல்லது. அந்த 100 ஒட்டகங்களும் தரையில் படுத்தவுடன் அங்கே இருக்கிற ஓய்வறையில் நீ படுத்து தூங்கிவிட்டு காலையில் திரும்பி வா.. " என்றார்..

"சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் கண்களில் தூக்கமின்றி களைப்புடன் காலையில் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை .. " என்றான்..

"என்ன ஆச்சு?" என்றார் முனிவர்..

 "சில ஒட்டகங்கள் தானாகவே தரையில் படுத்துவிட்டன.. 

சில ஒட்டகங்களை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன். 

ஆனால் அனைத்து ஒட்டகத்தையும் படுக்கவைக்க முடியவில்லை. 

சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன..

 அனைத்து ஒட்டகத்தையும் ஒட்டுமொத்தமாக படுக்கவைக்க முடியவில்லை. அதனால நான் தூங்குவதற்கு  போகவே இல்லை" என்றான்.

முனிவர் சிரித்தபடியே "இதுதான் வாழ்க்கை.. வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது ஒட்டகத்தை படுக்க வைப்பது போன்றது.. 

சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும்.. சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம்.. ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிகாக எழலாம்... 

அனைத்து பிரச்சனையும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது..

பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் என கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதே.. 

 தீர்க்கமுடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை காலத்தின் கைகளில் ஒப்படைத்துவிட்டு உனக்கான ஓய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக்கொள் " என்றார்..

முனிவரை வணங்கிவிட்டு சென்றவன் சிலநாள் கழித்துவந்து முனிவரிடம்  "சில ஒட்டகங்கள் படுக்கவில்லை என்றாலும் நான் நிம்மதியாக படுத்து உறங்குகிறேன்.." என்றான்.

வாழ்வில் பிரச்சனைகள் என்பது நூறு ஒட்டகங்கள் போன்றது... 

அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்பு குறைவே.. 

 ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது...

 அப்படியே நமக்கான பிரச்சனைகள் தீர்வதற்கான காலமும் உள்ளது..  

ஆகவே சிலவற்றை காலத்தின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு, வாழ்வை அமைதியாக அனுபவிப்போம்.

வெட்கத்தை விடுங்கள்!

(படித்ததில் பிடித்தது)

    மீண்டும் ஒரு கதை .. படித்ததில் ரகசியத்தை உணர்ந்தேன். 🦅 🦅 🌺🌸
குஞ்சுப் பறவை ஒன்று சோகமாய் இருந்தது. அதன் தாய்ப் பறவை, ‘‘ஏன் சோகமாய் இருக்கிறாய்’’ என்று கேட்டது. 

குஞ்சுப் பறவை, ‘‘எனக்கு பிறரிடம் எதையும் கேட்பதற்கே கூச்சமாக இருக்கிறது’’ என்றது. 

‘‘தேவையில்லாத வெட்கம் உன் வாழ்க்கையை சிறப்பில்லாததாக ஆக்கிவிடும்’ என்று தாய் எச்சரித்தது. குஞ்சு அதைக் கேட்டு, ‘‘சும்மா பொன்மொழியாக சொல்வது எளிது. செய்து காட்டுவது கடினம்’’ என்றது. 

இதைக் கேட்ட தாய்ப்பறவை, தன் குஞ்சுப் பறவையை அழைத்துக் கொண்டு பறந்தது. ஏரிக்கரையோரம் சென்று பறந்தபடி, நீரின் அருகே எச்சமிட்டது. ஏரியில் ததும்பிய சிற்றலை, எச்சத்தை நீரில் கரைத்தது. 

தாய்ப்பறவை ஏரியை அழைத்து, ‘‘எனக்கு என் எச்சம் வேண்டும். கொடுத்து விடு’’ என்றது. ‘‘அது என்னுள் கரைந்து போய்விட்டது. அதைத் திருப்பிக் கொடுக்க முடியாது. அதற்கு பதிலாக ஏரிக்குள் இருக்கும் மீன் ஒன்றைத் தருகிறேன்’’ என்றது ஏரி.
 
தாய்ப்பறவை அந்த மீனை எடுத்துக்கொண்டு பறந்தது. ஒரு வீட்டின் முன்னால் வைத்துவிட்டு கொஞ்ச நேரம் மறைந்திருந்தது. 

வீட்டில் இருந்தவர்கள் மீனை எடுத்துச் சென்ற சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டி, ‘‘என் மீன் எங்கே? எனக்கு அது வேண்டும்’’ என்றது. ‘‘அதைக் குழம்பு வைத்து சாப்பிட்டுவிட்டோம். அதற்கு பதிலாக நாங்களே தயாரித்த தரமான கயிறு தருகிறோம்’’ என்று கொடுத்தார்கள். 

தாயும் குஞ்சும் கயிறை எடுத்துக் கொண்டு பறந்தன. வழியில் ஒருவர் கிணற்றருகே கவலையுடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தன. அவருடைய கிணற்றில் கயிறு இற்றுப் போய்விட்டதாம். ‘‘கயிறில்லாமல் நீர் இறைக்க முடியாது. நீர் இல்லாமல் போனால் என் வீட்டில் நடக்க இருக்கும் விழா நடக்காது’’ என்று புலம்பினார். 

‘‘நான் கயிறைக் கொடுத்தால் நீங்கள் என்ன தருவீர்கள்?’’ என்று தாய் கேட்டது.

‘‘என்னிடம் இருக்கும் அரிய வகை விதை நெல் ஒரு படி தருகிறேன். அது அழிந்து விட்டதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அழியவில்லை. என்னிடம் விதையாக கொஞ்சம் இருக்கிறது’’ என்றார் அவர்.

தாயும் குஞ்சும் விதைநெல்லை சுமந்துகொண்டு வயலுக்கு வந்தன. அங்கே அந்நாட்டின் ராஜா விவசாயத்தை கண்காணித்துக் கொண்டிருந்தார். அவருக்கு விவசாயத்தில் அதிக ஆர்வம். அவர் அருகே விதை நெல்லைப் போட்டுவிட்டு தாயும் குஞ்சும் மறைந்தன. திரும்பி வந்தால் நெல் இல்லை. 

ராஜாவிடம் தாய் கேட்டது, ‘‘என் அரிய வகை விதை நெல் எங்கே?’’

ராஜா திடுக்கிட்டு, ‘‘அந்த அரிய வகை விதை நெல் யாருடையது என தெரியாது. நான் அதைப் பயிரிடச் சொல்லிவிட்டேன். அது உன்னுடையதா? அதற்கு பதிலாக நீ என்ன கேட்டாலும் செய்கிறேன்’’ என்றார்.

ராஜாவின் அரியணையில் ஒரு மணி நேரம் அமர்ந்து அரசாட்சி புரியும் உரிமையை தாய்ப்பறவை கேட்டது. ராஜாவும் ஒரு மணி நேரம் அதை ஆட்சி செய்ய வைத்தார். 

அதிகாரத்தைப் பெற்றதும் தாய்ப்பறவை, ‘‘எங்கள் பறவை இனங்களுக்கு தேவையான உணவை இனிமேல் ராஜாவே கொடுக்க வேண்டும்’’ என்றொரு ராஜ கட்டளை பிறப்பித்தது. 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குஞ்சுப் பறவை அசந்துவிட்டது. ஒன்றுக்குமே உதவாத எச்சத்தில் ஆரம்பித்து நாட்டை ஆளும் அதிகாரத்தைப் கைப்பற்றி, தங்களுக்கான உணவுக்கும் வழி செய்த அம்மாவின் செயல்திறன் பற்றி பெருமைப்பட்டு புகழ்ந்து சொன்னது. 

அதற்கு தாய்ப்பறவை, ‘‘நமக்கு இந்த உணவு வேண்டாம். ராஜாவிடம் சொல்லிவிடுவேன். நான் இதைச் செய்து காட்டியது உனக்கு புரிய வைக்கத்தான். 

ஒன்றுமே இல்லாத ஒன்றில் இருந்துகூட, கூச்சப்படாமல் கேட்கும் திறனால் பலவற்றை உருவாக்கிவிட முடியும். 

வெட்கப்படும் உயிரினங்களால் இவ்வுலகில் சிறப்பாக வாழ முடியாது. உனக்குத் தேவையானவற்றை கூச்சப்படாமல் உலகத்திடம் வாய்விட்டுக் கேள். 

கொடுப்பதும் கொடுக்காததும் அவர்கள் இஷ்டம். கேட்காமலேயே, ‘கொடுக்க மாட்டார்கள்’ என்று யூகம் செய்யாதே’’ என்றது. உழைப்போம் . . . .
உயா்வோம் . . . . 🦅 💐

பாசிட்டிவ் எனர்ஜி! (படித்ததில் பிடித்தது)

சாமான்ய மனிதர்களால் எப்போதும் பாசிட்டிவ்வாகவே இருந்துவிட முடியாது. எதிர்மறை எண்ணங்கள் வருகிறபோது, அவை தவறானவை என்று நீங்கள் உணர்வதே போதுமானது. 

அதைவிட்டுவிட்டு, 'ஐயோ, எனக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகம் வருகின்றனவே' என்று அதன் மீதே கவனம் வைக்காதீர்கள்.

காரணம், எதிர்மறை எண்ணங்கள் உங்களை மட்டுமே பிடித்திருக்கும் ஒரு வியாதி அல்ல... எல்லோருக்கும் வந்து போகும் சாதாரண பிரச்னை தான்' 

அது எப்படி ஒரு மனிதன் எப்போதும் பாசிட்டிவ்வான சிந்தனைகளோடு மட்டுமே இருக்க முடியும்? 

எந்த எண் ணங்களை வேண்டாம் என்று மெனக்கெட்டு துரத்த நினைக்கிறோமோ, அந்த எண்ணங்கள் நம்மை விடாமல் துரத்தும் என்பதுதான் உண்மை. 

எதிர் மறை எண்ணங்கள் வந்துவிடக் கூடாது என்ற பயத்திலும், அதீதமான அக்கறையிலும் அதைப் பற்றியே அதிக நேரம் சிந்தித்துக்கொண்டே இருக்கிறோம்.

பாசிட்டிவ்வாக இருக்க முனைதல் என்பது ஒரு பகீரதப் பிரயத்தனமாகப் பார்க்கப்பட்டால், அது பெரும் சுமை ஆகிறது. 

மனிதனின் மனதில் எல்லா எண்ணங்களுக்கும் இடம் உண்டு. அது வரும்... போகும். இந்த எண்ணம் எனக்கு வரவே கூடாது என்று செயற்கையாக அதைத் தடுக்க முனைவது, மனதை ஏமாற்றும் தந்திரம் அல்ல... மூளையை ஏமாற்றும் வேலை.

நேர்மறை எண்ணங்கள் என்ற மனோநிலையை மேலோட்டமாகவே கவனித்துக்கொண்டு இருக்கிறோம். 

இன்று எனக்கு எல்லாமும் நன்றாகவே நடக்கும்', 'நான் போகிற இடத்தில் அந்த மனிதர் நிச்சயம் இருப்பார்', 'இன்றைக்கு நான் எதிர்பார்த்தபடி அந்த வேலை முடிந்துவிடும்

இப்படி நேர்மறையான வாக்கியங்களை மனதுக்குள் 10 முறை சொல்லிக் கொண்டால், பாசிட்டிவ்வாக இருந்துவிட முடியுமா? 

இன்னமும் அழியாமல் மனதுக்குள்கிடக்கும் எதிர்மறை எண்ணத்தின் மீதுதான் இந்த பாசிட்டிவ் சிந்தனைகள் வண்ணம் பூசி அடுக்கிவைக்கிறோம். இந்தக் குறுக்குசால் வேலைகள் எப்படி நிரந்தரத் தீர்வைத் தரும்? 

நேர்மறை எண்ணங்கள் வேண்டும் என்றால், எதன் மீதாவது தாகம் இருக்க வேண்டும். அதன் மீது அசைத்துவிட முடியாத ஆசை இருக்க வேண்டும். அளப்பரிய காதல் இருக்க வேண்டும். இது எனக்கு வேண்டும் என்ற வேட்கை இருக்க வேண்டும். அதுதான் நமது ஒவ்வொரு படிநிலையையும் பாசிட்டிவ்வாகப் பார்க்க வைக்கும்.

வாழ்வியலில் நடைமுறைகளின் பார்வையில் நின்று பார்த்தால், ஓர் உண்மை புலப்படுகிறது. அது, 'எதிர்மறைச் சிந்தனைகளை எதிர்கொள்வதுதான் நேர்மறையாக இருத்தல்' என்பது.

ஏதாவது ஓர் இடத்தை அல்லது இலக்கை எட்டுவதில் தீராத ஆசை இருக்கும் என்றால், எதிர்மறைச் சிந்தனைகள் என்று சொல்லப்படும் எந்த விஷயங்களின் மீதும் நமது கவனம் குவிவது இல்லை. 

காரணம், கவனம் இலக்கின் மீதும் ஆசையின் மீதும் குவிந்து இருக்கிறது.

பாசிட்டிவ்வாக இருக்க முனைதல் என்பது சாதாரணமாக நடக்க வேண்டிய ஒரு விஷயம். 

இலக்கை நோக்கிக் குறிவைத்து ஓடுவோம். இடறிவிழுந்தால், மீண்டும் எழுந்து ஓடுவோம். 

ஓட ஆரம்பிப்பதற்கு முன்னதாக, மூன்று முறை 'நான் ஓடும்போது ஒன்றும் ஆகாது. வேகமாக ஓடி என் இலக்கைத் தொடுவேன்' என்று சொல்லிக்கொள்வதால் மட்டும் காரியம் நடக்காது.

இப்படி நீங்கள் திட்டமிட்டு பாசிட்டிவ்வாக யோசித்துக்கொண்டே இருக்கும்போது, ஒருவேளை இடறிவிழுந்துவிட்டால் என்று ஒரு சிந்தனை வரலாம். வந்துவிட்டுப் போகட்டும். அதை மெனக்கெட்டுத் தடுக்க முனையாதீர்கள். விழுந்தால் என்ன, மீண்டும் எழுந்துகொள்வேன் என்று தைரியமாக அந்த எண்ணத்துக்குப் பதில் சொல்லிப் பழகிக்கொள்வோம்.

எதிர்மறை எண்ணங்கள் வந்தால், அதைத் தடுக்க முனைவதைவிட, அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கவோ, ஒருவேளை நம் கவனத்தை அரித்துக்கொண்டே இருந்தால், அந்த எண்ணத்துக்குப் பதில் சொல்வதற்கோ தேவையான மனோநிலைதான் பாசிட்டிவ்வாக இருக்க முனைவதன் தொடர்புப் புள்ளி

எதிர்மறை எண்ணங்கள் வரக் கூடாது என்ற ஆழ்ந்த யோசனையுடன், ஒவ்வொரு செயலையும் காரண ஆராய்ச்சிகளுடன் நடத்துகிற சுபாவம் நிறையப் பேருக்கு வர ஆரம்பித்து இருக்கிறது. 

இதுவும் ஒரு வகைப் பிரச்னைதான். எண்ணங்களைத் தடுக்க முனைவதால் வருகிற பிரச்னை

எண்ணங்களை நெருக்கடிக்கு ஆளாக்காமல் கையாளுங்கள். எதிர்மறைச் சிந்தனைகள் வரும்போது, அது தவறு என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். 

தொடர்ந்து உங்கள் வேலைகளைப் பாருங்கள். அதன் மீது நீங்கள் கவனம் செலுத்தவில்லை எனில், அது உங்களைக் கண்டுகொள்ளப்போவது இல்லை. 

எனக்கு எதிர்மறை எண்ணங்களே வரக் கூடாது என்று தெருமுனையில் இருக்கிற சாமியிடம் போய் வேண்டுதல் வைக்காதீர்கள். 

இலக்கின் மீது குறிவைத்து ஓடுவோம்... இடறி விழுந்தால் எழுந்துகொள்வோம் . வாழ்க்கை எளிதானதுதான். அதைத் தேவை இல்லா மல் நெருக்கடிக்கு ஆளாக்க வேண்டிய அவசியம் இல்லை

படித்ததில் அவசியமானது....🌹🌹🌹🌹🌹நட்புடன் வெங்கட்ராமன் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

படித்ததில் பிடித்தது!

#பகுத்தறிவு

குக்கரில் சமைத்து சாப்பிடுவதால்தான் நமக்குப் பல வியாதிகள் வருகின்றன என்று மருத்துவர்களே நம்பத் துவங்கி இருப்பதுதான் வேதனை.

அல்லது அவர் கூறியதை மாப்பிள்ளை தங்க சொம்புலதான் தண்ணி குடிப்பாராம் என்று பரபரப்புக்காக செய்தி வெளியிட்ட கூத்தும் நடந்திருக்கலாம்.

ஆனால், வந்த செய்தியின் அடிப்படையிலேயே பார்ப்போம்.

இந்தியாவில் 1990 களில் 4-ம் இடத்தில் இருந்த இதய நோய் இன்றைக்கு முதல் இடத்தில். 10-ம் இடத்தில் இருந்த சர்க்கரை நோய் 2-ம் இடத்தில்.

என்று பெட்டிச் செய்தி சொல்கிறது. இதற்கும் குக்கரில்லாமல் அரிசி, பருப்பை வேகவைத்து சமைப்பதற்கும் என்ன சம்பந்தம்?

இந்தியா முழுமைக்கும் என்று ஆரம்பிக்கும்போதே குக்கர் தியரி அடிபட்டுப் போகிறது. வடக்கே குக்கரில் அரிசியும் பருப்பும் சாம்பாரும் யாரும் நம்மைப் போல செய்து 3 வேளையும் சாப்பிடுவதில்லை. ஆக, இந்தத் தியரி அங்கே அடிபட்டுப் போகிறது.

அமெரிக்காவில், ஜெர்மனில், ரஷ்யாவில் என்று டயபடிக்கும், இதய நோய்களும் உலகளாவிய பிரச்னை.

பிரச்னை குக்கர் அல்ல.

அரிசி அல்லது மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட். கடைசி வரை பிரச்னைகளின் ரூட் காஸான இதைப் பற்றிப் பேசவே மாட்டார்கள்.

இதய நோய்களுக்கு முக்கியக் காரணி - கொழுப்பு அடைத்துக்கொள்ளுதல், மரபணு கோளாறுகள், லாகிரி வஸ்துகள், உடற்பயிற்சி இல்லாமை, தூக்கமில்லாமை, ஸ்ட்ரெஸ், டயபடிஸ், பிபி.

மேலே சொன்னவற்றில் மரபணு பிரச்னைகள் தவிர்த்து மற்ற அனைத்தும், மாவுச்சத்தைக் குறைத்தாலே நல்ல நிவாரணம் கிடைக்கக் கூடடியவை. கூடவே லாகிரி வஸ்துக்களைத் தவிர்த்து, நடைப்பயிற்சி செய்தாலே போதும். சுகர் ஏறாது, பிபி நார்மலாகும், உடல் எடை குறையும், நல்ல உறக்கம் வரும், ஸ்ட்ரெஸ் குறையும்.

எந்த ஒரு எச்சரிக்கைக்குப் பின்னும்  லாஜிக் இருக்கிறதா என்று பகுத்தறியுங்கள்.

கான்சர் செல்களின் வளர்ச்சிக்கான முக்கிய உணவும் க்ளுக்கோஸ்தான். அதை அபரிமிதமாக நம் உடலுக்குத் தருவது அரிசி போன்ற மாவுச்சத்து நிரம்பிய உணவுகள்தான்.

உங்களுக்கு உடல் பருமனும், டயபடிஸும், பிபியும் இருந்தால், குக்கர் இல்லை. மண்பானையில் சமைத்தாலும், அப்படியே அரிசியைச் சாப்பிட்டாலும் உங்கள் இதயம் டயபடிக்காலும், பிபியாலும் பிரச்னைக்குள்ளாகப் போவது உறுதி.

ஆக, புகையிலை எனும் மாவுச்சத்தை நீங்கள் பீடியாக (குக்கர்) பிடித்தாலும், சிகரெட்டாகப் (மண் பானை) பிடித்தாலும், சுருட்டாகப் (மைக்ரோவேவ்) அப்படியே வாயில் போட்டாலும் (சுட்டு சாப்பிடுவது) அதன் விளைவுகளை அனுபவிக்கத்தான் வேண்டும்.

ஆக, நாம் பகுத்தறியவேண்டியது:

குக்கரில்லாமல் அரிசி சோறு கஞ்சி வடித்து சாப்பிட்டால் இதய நோய், டயபடிக், பிபி வராதா?

வரும்.

குக்கரில்லாமல் அரிசி சோறு கஞ்சி வடித்து சாப்பிட்டால் கான்சர் வராதா?

வரும்.

குக்கரில்லாமல் அரிசி சோறு கஞ்சி வடித்து சாப்பிட்டால் கிட்னி பிரச்னை வராதா?

வரும்.

குக்கரில்லாமல் அரிசி சோறு கஞ்சி வடித்து சாப்பிட்டால் ஒபிசிட்டி வராதா?

வரும்.

குக்கரே பயன்படுத்தாத மக்களுக்கும் மேலே உள்ள பிரச்னைகள் உள்ளதா?

ஆம்.

குக்கர் பயன்படுத்தும் மக்களுக்கும் மேலே உள்ள பிரச்னைகள் உள்ளதா?

ஆம்.

சைவம் மட்டும் சாப்பிடும் மக்களுக்கும் மேலே உள்ள பிரச்னைகள் உள்ளதா?

ஆம்.

அசைவம் மட்டும் சாப்பிடும் மக்களுக்கும் மேலே உள்ள பிரச்னைகள் உள்ளதா?

ஆம்.

உலகின் எல்லா நாட்டு மக்களுக்கும், எல்லா மொழி, இன, வர்க்க மக்களுக்கும் மேலே உள்ள பிரச்னைகள் இருக்கிறதா?

ஆம்.

எனில் இதன் பொதுவான காரணி என்ன?

இவர்கள் அனைவரும் உண்ணும் பொதுவான, பிரதானமான உணவு என்ன?

மாவுச்சத்து எனப்படும் கார்போஹைட்ரேட். மற்றும் இனிப்புகள், ஜங்க், ப்ரைடு உணவுகள்.

எனில், கண்ணாடியைத் திருப்பினால் (கஞ்சி வடித்து சாப்பிட்டால்) எப்படி சார் ஆட்டோ ஓடும்?

-@-

வயிறு என்பது உடலின் இரண்டாவது மூளை.

அதற்கு குக்கர் சாதம், கஞ்சி வடித்த சாதம், மாப்பிள்ளை சம்பா, மருமகள் வம்பா என்பதெல்லாம் தெரியாது.

அதற்குத் தெரிந்தது மூன்று.

மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட்.
புரதம் எனும் ப்ரோட்டீன்.
கொழுப்பு எனும் ஃபேட்.

இதை எப்படி சரியான, தேவையான, நம் உடலுக்கேற்ற அளவுகளில் தரமாக உண்டு, உடற்பயிற்சி செய்து, விரதம் இருப்பது என்று கற்றுக்கொண்டால் எந்நாளும் ஆரோக்கியமே.

Thursday, 10 October 2019

குடை

இவன் பக்தர்களின் ஆதிசேஷன்!
தலைகீழாய்ப் பூக்கும்
தாமரைப்பூ! 
அரசன் மட்டுமல்ல எளியவரும் பிடித்துக்கொள்ளும் கொற்றம்!
இவனது நிழலே  பலருக்குத் தொழிற் கூடமாய்!
எவ்வளவுதான் மழையில் நனைந்தாலும் ஜலதோஷம் பிடிக்காத பாக்கியசாலி!
சித்திரை மாதத்து கத்திரி வெயிலைக் குற்றம் சொல்லாத ஒரே ஜீவன்!
மொத்தத்தில் இவன் பூமியில் வேறூன்றாமலேயே மனிதருக்கு நிழல்தரும்
 இரும்பு மரம்!     

Wednesday, 9 October 2019

விடியல் சிந்தனை

தயக்கம் என்னும் கூட்டை உடைத்தால், முயற்சி என்னும் சிறகு விரியும்!
 பிறகு வெற்றிப்
 பட்டாம் பூச்சிகளாய் வானில்  சிறகடித்துப் பறக்கலாம் 
நான் புன்னகைக்க மறக்கும் போதெல்லாம் என்னைப் பார்த்துப் புன்னகைக்கிறது; என் புகைப்படம்! 

Eat that frog book's main points in Tamil காலை எழுந்ததும் தவளை

 பிரையன் டிரேசி அவர்கள் எழுதிய   "காலை எழுந்ததும் தவளை" என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான கருத்துகளை இங்கே தொகுத்துள்ளேன்...